Rock Fort Times
Online News

கொங்கு மண்டல ரசிகர்களை குறிவைத்து பரிசுப் பொருட்கள் வழங்கிய நடிகர் தனுஷ்…. (வீடியோ இணைப்பு)

நடிகர், இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக தன்மை கொண்டவர் தனுஷ். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் அதிகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். மாவட்டம் வாரியாக ரசிகர்களை சந்தித்துவரும் நடிகர் தனுஷ், இந்த முறை கொங்கு மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சென்னையில் வைத்து சந்தித்தார். அப்போது ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது ரசிகர்கள் தனுஷுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்த சந்திப்பில் ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு அசைவ உணவு விருந்து, பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்