பரபரப்பான அரசியல் சூழ்ந்லையில் நாளை(20-02-2026) தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நாளை மாலை 6.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக இந்த கூட்டம் நடைபெறுகிறது. மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.. எம்.எல்.ஏ.க்கள், தொகுதிப் பார்வையாளர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற தலைப்பில் வீடு வீடாக மேற்கொள்ளும் பிரசார ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

Comments are closed.