புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள நெய்வாசலில் அண்மையில் மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. அப்போது அந்த இடத்தில் முதியவர் ஒருவர் அனுமதி இன்றி தற்காலிகமாக கடை அமைத்து இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு போலீஸ்காரர்களில் ஒருவர் கீழே இறங்கி அந்தக் கடையின் டேபிள் மற்றும் தின்பண்டங்களை காலால் எட்டி உதைத்து சூறையாடினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், முதியவரின் கடையை சூறையாடிய போலீஸ்காரரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி திருச்சி சரக ஐஜி பாலகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Comments are closed.