ஜி.கே.வாசன் உட்பட தமிழ்நாட்டில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்: மார்ச் 16ம் தேதி நடைபெறுகிறது !
தமிழ்நாட்டில் விரைவில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான ராஜ்யசபா தேர்தல் வருகிற மார்ச் 16-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்பாக ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் மாதம்
37 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஜி. கே.வாசன், திருச்சி சிவா, கனிமொழி சோமு, என்.ஆர்.இளங்கோ, தம்பிதுரை, அந்தியூர் செல்வராஜ் ஆகிய 6 பேரின் பதவிகாலம் நிறைவடைகிறது. இந்த 37 இடங்களுக்கான எம்.பிக்களை தேர்வு செய்ய மாநிலங்களவை தேர்தல் வருகிற மார்ச் 16ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 26ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 5. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை – மார்ச் 6, வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 9. போட்டி இருந்தால் வாக்குப் பதிவு நடைபெறும் நாள் மார்ச் 16. அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Comments are closed.