தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று(17-02-2026) தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது அவர்கள், “தமிழ்நாடு பட்ஜெட் என்பது காது குத்தும் விழா” என்று விமர்சனம் செய்து அச்சடித்த பத்திரிகையுடன் வருகை தந்தனர். அந்த அழைப்பிதழில், “கடந்த நாலரை ஆண்டுகளாக பட்ஜெட் என்னும் பெயரில் தமிழ்நாடு மக்களுக்கு நடத்தப்படும் மாபெரும் காது குத்தும் விழா இந்த வருடமும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Comments are closed.