Rock Fort Times
Online News

திருச்சியில் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் திருச்சி, லால்குடி காமாட்சி நகர் பகுதியில் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து லால்குடி துணை கண்காணிப்பாளர் அஜய்தங்கம் தலைமையில் லால்குடி அடுத்த அய்யன் வாய்க்கால், காமாட்சி நகரில் சோதனை நடத்தியபோது ப்கருதீன் என்பவர் 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலை குட்காவை மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மேலும் அவரிடமிருந்து 1 லட்சம் ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யபப்பட்டது. பக்ரூதினை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்