Rock Fort Times
Online News

காதலர் தினம்: ஒரு ரோஜா 100 ரூபாயை தாண்டி விற்பனை…! 

காதலர் தினத்தையொட்டி இன்று (பிப்ரவரி 14) நாடு முழுவதும் பலவிதமான ரோஜாக்கள் விற்பனையாகி வரும் நிலையில் ரோஜாப் பூக்களின் விலை அதிகரித்துள்ளன. சில முக்கிய நகரங்களில் ஒற்றை ரோஜா பூவின் விலை ரூ.100-ஐ எட்டியிருக்கிறது. சாதாரணமாக விற்பனையாகும் ரோஜா பூக்கள் ஒன்று ரூ.15 முதல் ரூ.30 வரை இன்று விற்பனையாவதாகவும், பெங்களூர் ரோஜா என்று அழைக்கப்படும் சிவப்பு வண்ண ரோஜாக்கள் இன்று பல நகரங்களில் ஒரு பூ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனையாவதாகவும் கூறப்படுகிறது. அழகாக வடிவமைக்கப்பட்ட உறையில் சுற்றிக் கொடுக்கப்படும் ரோஜா பூக்கள் ரூ.120 வரை விற்பனையாகிறதாம்.  அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் என்பதால் ரோஜாக்களின் விலை அடுத்த வாரம் வரை உயர்ந்தே இருக்கும் என்று மலர் வணிகர்கள் தெரிவிக்கிறார்கள். காதலர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்