Rock Fort Times
Online News

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்…!

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி எஸ்.பி.யாக இருந்த சிலம்பரசன், சென்னை சட்டம் – ஒழுங்கு துணை ஐ.ஜி. மற்றும் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல திருநெல்வேலி மேற்கு, காவல் துணை ஆணையராக இருந்த மதன், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட தலைமையக காவல் துணை ஆணையராக இருந்த விஜயகுமார், திருநெல்வேலி மேற்கு – துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி காவல் ஆணையர், அந்த மாவட்ட தலைமையக காவல் துணை ஆணையர் பொறுப்பையும் சேர்த்து கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்