Rock Fort Times
Online News

நாளை (பிப்.12) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் ‘கட்’…* ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை !

மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாளை (12-ந்தேதி)வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்க இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஆகிய கட்சிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள், தொழில் வாரியான சம்மேளனங்கள். ஐக்கிய விவசாய முன்னணி அமைப்புகள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் யாரும் ஈடுபடக் கூடாது, அவ்வாறு ஈடுபட்டால் அவர்களது சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்