பட்ஜெட்டில் தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசை கண்டித்து நாளை (பிப்.12) திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டம்…* அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை !c
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- மத்திய பட்ஜெட் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகத்திற்கு எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. தமிழகத்தை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இதனை கண்டித்தும், பாஜக அரசுக்கு துணை போகும் அ.தி.மு.க.வை கண்டித்தும், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்பில், நாளை (பிப்.12) வியாழக்கிழமை அன்று மாலை 4 மணி அளவில் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகரம், ஒன்றியம், நகரம், பேரூர் கழகங்கள் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட கிளை கழகச் செயலாளர்கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தோழமைக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என திரளாக கலந்து கொள்ள வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.