இந்திய தேர்தல் அதிகாரிகள் குழு இன்று(பிப்.11) சென்னை வருகை- * சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை…!
தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான ஆயத்த பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. முதல் கட்டமாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 17ம் தேதி வெளியிடப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நடத்தப்பட இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்வதற்காக துணை தேர்தல் கமிஷனர் பானு பிரகாஷ் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் இன்று( பிப்.11) இரவு தமிழகம் வருகின்றனர். நாளை 12ம் தேதி மற்றும் 13-ந் தேதிகளில் சென்னையில் முகாமிட்டு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்கள். அதனைத் தொடர்ந்து வருமான வரித்துறை, சுங்கத்துறை, காவல்துறை, ரெயில்வே, துணை ராணுவம், தபால்துறை, சிவில் விமான போக்குவரத்துறை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்கள். 13-ந் தேதி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (கலெக்டர்கள்) ஆலோசனை மேற்கொள்கின்றனர். அதன் பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, சட்டம்- ஒழுங்கு பிரச்சனை வரக்கூடிய தொகுதிகள், வாக்குச்சாவடிகள் ஆகியவை பற்றி ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

Comments are closed.