திருச்சி மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்…* மேயர் மு.அன்பழகன் தொடங்கி வைத்தார் !
தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகராட்சி ஐந்தாவது மண்டலத்தில் இன்று(பிப்.9) நடைபெற்ற விழாவில் மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து தூய்மை பணியாளர்களுக்கு உணவு பரிமாறினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், துணை ஆணையர் க.பாலு, மண்டல தலைவர் விஜயலட்சுமி கண்ணன், நகரப் பொறியாளர் சிவபாதம், நகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி ,உதவி ஆணையர் சென்னுகிருஷ்ணன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். இந்த திட்டத்தின் கீழ் 5 மண்டலத்திற்கு உட்பட்ட 65 வார்டுகளில் பணிபுரியும் நிரந்தர, தூய்மை பணியாளர்கள், ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள், மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணியாளர்கள், பள்ளிகள் மற்றும் வார்டுகளில் கழிவறை பராமரிக்கும் பணியாளர்கள் பயன்பெற உள்ளனர். அவர்களுக்கு ஒவ்வொரு நாளும் காலை உணவு வழங்கப்படுகிறது.

Comments are closed.