வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம், திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட விஜய் முடிவு…?
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ளதால் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது. த.வெ.க. சார்பில் போட்டியிடு பவர்களிடமிருந்து தற்போது விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், த.வெ.க தலைவர் விஜய் வருகிற சட்டமன்றத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது விருகம்பாக்கம், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிடக் கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஒரு தொகுதி மற்றும் தமிழகத்தின் மத்திய பகுதியில் ஒரு தொகுதி என்ற அடிப்படையில் இந்த இரண்டு தொகுதிகள் விஜய் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.