Rock Fort Times
Online News

தமிழ்நாடு காவல்துறையில் 13 அதிகாரிகள் பணியிட மாற்றம்…- ஏ.எஸ்.பி.க்கள் இருவர் எஸ்.பி.க்களாக பணி உயர்வு..!

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஐபிஎஸ், ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளின் பணியிட மாற்றங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இந்நிலையில், இன்று தமிழக உள்துறை செயலாளர் 13 ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இரண்டு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு:

(1), கும்பகோணம் உதவி காவல் கண்காணிப்பாளராக கும்பகோணம் உட்கோட்டத்தில் பணியாற்றி வரும்  அங்கித் சிங் ஐ.பி.எஸ்க்கு காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டு, அவர் சேலம் மாநகர வடக்கு காவல் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.

(2), அதே போல், கோவை மாவட்டம் பொள்ளாச்சி உட்கோட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றும் ஸ்ரிஷ்டி சிங்கிற்கும் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு தரப்பட்டுள்ளது. அவர் திருச்சி மாநகர காவல்துறையில் துணை ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

  • தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய ஐ.ஜி. ராஜேஸ்வரி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஐ.ஜி. ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு ஐ.ஜி. கயல்விழி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய ஐ.ஜி. ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • காத்திருப்பு பட்டியலில் இருந்த ஆர்.வி. ரம்யா பாரதி, ஐ.பி.எஸ்., சென்னை குற்றப்பிரிவின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

  • வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஏ. மயில்வாகனன், ஐ.பி.எஸ்., ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

  • சேலம் வடக்கு துணை கமிஷனர் சிவராமன் வேலூர் எஸ்.பி. ஆகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • திருச்சி தெற்கு துணை கமிஷனர் டி. ஈஸ்வரன் ஆவடி போலீஸ் துணை கமிஷனர் ஆகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • ரயில்வே எஸ்.பி. ஐ. ஈஸ்வரன் கோயம்பேடு துணை கமிஷனர் ஆகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • கோயம்பேடு துணை கமிஷனர் சுஜித் குமார் சென்னை மேற்கு போக்குவரத்து துணை கமிஷனர் ஆகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • சென்னை மேற்கு போக்குவரத்து துணை கமிஷனர் சுஹாசினி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய எஸ்.பி. ஆகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  • தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய எஸ்.பி. நாகஜோதி போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்.பி./முதல்வர் ஆகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்