உலகளவில் சமூக மற்றும் பொருளாதார சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கார்ல் மார்க்ஸ் அவர்களின் புகழை மக்களால் அறிய வைப்பதற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 03.04.2025 அன்று சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு புதிய உருவச்சிலை நிறுவப்பட இருப்பதாக அறிவித்தார். அதன்படி, செய்தி- மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் சென்னை கன்னிமாரா பொது நாலகம், எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள கார்ல் மார்க்ஸின் உருவச்சிலையை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சிலை திறப்பு விழாவில் திமுக கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றனர். இதனைப் பற்றி முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது: “கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பால் சிவந்தது சென்னை. இழப்பதற்கு அடிமைச் சங்கிலிகளைத் தவிர ஒன்றுமில்லை. அடைவதற்கோ பொன்னுலகம் காத்திருக்கிறது.”
“நல்லவை எங்கிருந்து வந்தாலும் வணங்கி ஏற்றுக்கொள்வோம். ஆனால் அல்லவை ஆதிக்கம் செலுத்தப் பார்க்குமாயின் தடுத்து நிறுத்துவோம். இதுதான் திராவிட மாடல்.” என்று பதிவிட்டுள்ளார்.

Comments are closed.