திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறையில் நியமனம் வழங்கும் வகையிலான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை (பிப். 7) நடைபெற உள்ளது. தமிழக நிர்வாகத்துறை நகராட்சி அமைச்சர் மற்றும் திருச்சி மேற்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் கே.என். நேரு ஏற்பாட்டில், கேர் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை காலை 8 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் உற்பத்தித் துறை சார்ந்து முன்னணி நிறுவனங்கள் எம்.ஆர்.எப்., ரானா, செயின்ட் கோபைன், டிவிஎஸ் மோட்டார்ஸ், லூகாஸ், டாடா மோட்டார்ஸ், அசோக் லேலண்ட், யமஹா மோட்டார்ஸ், போஷ்க், மதர்சன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. தகவல் தொழில்நுட்பத் துறையிலிருந்து விடார்ட், சுதர்லேண்ட், லாரல்ஸ் சாபி, இன்விடஸ் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களும்; வங்கி நிதித் துறையிலிருந்து பாரத் ஸ்டேட் பாங்க், எச்டிஎப்சி, ஆக்ஸிஸ் வங்கி, ஆர்.கே. ராம் ஃபைனான்ஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. நிறுவனங்கள் டெல்டா மாவட்ட இளைஞர்களைத் தேடி வருகின்றதால், இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்த திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களின் வேலை தேடும் இளைஞர்கள் முன்வர வேண்டும். உடனே முன்பதிவு செய்பவர்களுக்கு நேர்காணலை எதிர்கொள்ள முன்பயிற்சிகள் ஜூம் வழியாகவும், நேரடியாகவும் வழங்கப்படும். முன்பதிவு செய்தால் நேர்காணல் வரிசையில் முன்னுரிமை உண்டு. இணைய வழியில் முன்பதிவு செய்ய www.givelifes.com என்ற இணைய முகவரியில் பதிவு செய்யலாம். மேலும் 91500 60036, 75300 88293 ஆகிய தொலைபேசி எண்கள் வழியாகவும் பதிவு செய்யலாம். இதற்கான ஏற்பாடுகளை திருச்சி வேலைவாய்ப்பு முகாம் அமைப்புக் குழு, கிவ் லைப், திரைஸ் அமைப்புகள் இணைந்து செய்து வருகின்றன.

Comments are closed.