Rock Fort Times
Online News

சட்டசபை தேர்தல் முன்னேற்பாடு: இறுதி வாக்காளர் பட்டியல் பிப்.17-ந் தேதி வெளியீடு..!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. பொதுவாக, சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் அந்தந்த மாநிலங்களுக்கு தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் சென்று ஆய்வு செய்வது வழக்கம். இம்மாதம் 17-ந் தேதி தமிழகத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதையொட்டி பிப்.12-ந் தேதி தேர்தல் துணைக் கமிஷனர்கள் தமிழகத்திற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் சென்னையில் 2 நாட்கள் தங்கி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை மேற்கொள்வார்கள். பின்னர், தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் கமிஷனிடம் அவர்கள் தகவல் வழங்குவார்கள். அதன் பின்னர், தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையில் தேர்தல் கமிஷன் குழுவினர் சென்னை வந்து ஆய்வு மேற்கொள்வார்கள். அவர்கள் வருகையின்போது, அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், வருமான வரித்துறை, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட மத்திய அரசுத் துறைகளின் அதிகாரிகளை அழைத்து தலைமை தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்துவார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்