திருச்சியில் பட்டப் பகலில் சம்பவம்: வீட்டிற்குள் புகுந்து தம்பதியை தாக்கி கொள்ளை முயற்சி- திருடனை மடக்கிப்பிடித்த பொதுமக்கள் !
திருச்சி, வயலூர் ரோடு, வாசன் வேலி குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று(பிப்.4) தம்பதியினர் வீட்டில் இருந்தனர். அப்போது அவர்களது வீட்டிற்குள் திருடன் ஒருவன் புகுந்துள்ளான். வீட்டில் தனியாக இருந்த அந்த தம்பதியை கட்டிவைத்து கத்தியால் உடலில் கீறி விட்டு வீட்டில் உள்ள நகை, பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளார். வலி தாங்க முடியாமல் அந்த தம்பதி அலறினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து அந்த திருடனை மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த திருடனை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று அவர் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்ட பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Comments are closed.