தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா இன்று (பிப்.2). பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், தமிழ்நாட்டில் மும்முனை போட்டி, 4 முனைப்போட்டி என்று சொல்கிறார்கள். அவர்களை பொறுத்தவரைக்கும் அப்படியே இருக்கட்டும். மாபெரும் மக்கள் சக்தியாக நம்ம அணி ஒரு பக்கம். அடுத்து தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகள் ஒரு பக்கம். அடுத்து பா.ஜ.க. தலைமையில் மற்றும் பலர்” என தெரிவித்தார். இதுகுறித்து பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்,”விஜய்க்கு ஒன்றுமே தெரியாது என்று நினைக்கிறேன்.3 ம் ஆண்டு தொடக்க விழாவில் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார். ஒரு நாட்டின், கட்சியின் தலைவராக இருந்துகொண்டு தமிழ்நாட்டில், தமிழ்நாட்டின் கலாச்சாரம் என்னவென்று தெரியாமல் ஆடிக் கொண்டிருக்கிறார். அவர் டான்ஸ் ஆடினால், டான்ஸ் மட்டும் ஆடிக்கொண்டிருக்க வேண்டியதுதான். என்டிஏ என்றால் பாஜக இருக்கிறது, அதிமுக இருக்கிறது, தமிழ் மாநில காங்கிரஸ், மேலும் பல கட்சிகளும் விவசாய அமைப்புகளும் இருக்கின்றன. இதுகூட தெரியாமல் பேசிக்கொண்டிருந்தால் எப்படி?” என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.