Rock Fort Times
Online News

தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது, வருகிற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் வெல்வோம்…- அமைச்சர் கே.என்.நேரு…!

தஞ்சையில், அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பெண்களுக்கான ஏராளமான நல திட்டங்களை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார். எந்த ஆட்சியிலும் நடைபெறாத அளவுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை செய்து சாதனை படைத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி சொல்வதை எல்லாம் மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். நான் ஏற்கனவே கருணாநிதி ஆட்சிதான் சிறப்பான ஆட்சி என கூறியிருந்தேன். ஆனால் தற்போது அதைவிட சிறப்பான ஆட்சியை முதல்-அமைச்சர் நடத்திக்கொண்டு வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பே தி.மு.க. தேர்தல் பரப்புரையை தொடங்கி விட்டது. கூட்டணி கட்சிகளை முதல்-அமைச்சர் நன்றாக வைத்துள்ளார். தி.மு.க. கூட்டணி மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. எங்களிடம் என்ன வேலை சொல்கிறாரோ அதை நிறைவேற்றுவதுதான் எங்களது வேலை. கண்டிப்பாக தி.மு.க.தான் வரும் தேர்தலில் வெல்லும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்