Rock Fort Times
Online News

பொதுமக்கள் மனுக்கள் மீதான சிறப்பு முகாம் – திருச்சி காவல்துறை

தமிழக காவல்துறை இயக்குநா்  டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஐபிஎஸ் உத்தரவின்பேரில், தமிழக முதல்-அமைச்சரின் தனிபிரிவில் இணையவழியில் கொடுத்த மனுக்களுக்கும், திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாளில் கொடுத்த மனுக்களுக்கும், பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெற்ற மனுக்களின் தீர்வு கண்டறியும் சிறப்பு முகாம் திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா ஐபிஎஸ் தலைமையில் நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமில் 45 மனுக்களில், மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர்களை நேரில் அழைத்து விசாரணை செய்தும், அதில் 26 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள்  விசாரணையில் உள்ளது. மேலும், கடந்த 5 மாதங்களில் திருச்சி மாநகர பகுதியை சேர்ந்த பொது மக்கள் தங்களது குறைகளை தீர்த்துக்கொள்ளும் வகையில் முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் இணையவழியில் கொடுக்கப்பட்ட 523 மனுக்களில், 437 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாளில் கொடுக்கப்பட்ட 173 மனுக்களில் 126 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த 653 மனுக்களில் 402 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்