Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் இன்று (ஜன.5) நம்பெருமாள் கைத்தல சேவை: நாளை வேடுபறி நிகழ்ச்சி…!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. பகல்பத்து உற்சவம் நிறைவடைந்த நிலையில் தற்போது ராப்​பத்து நடைபெற்று வருகிறது. ராப்​பத்து உற்சவத்​தின் 7ம் நாளான இன்று(05-01-2026) மாலை நம்பெரு​மாள் கைத்தல சேவை நடக்கிறது. இதையொட்டி பிற்பகல் 3 மணிக்கு நம்பெரு​மாள் மூலஸ் தானத்​திலிருந்து புறப்​பட்டு சொர்க்க வாசலை கடந்து மாலை 5.45 மணிக்கு திரு​மாமணி மண்டபத்தை வந்தடைகிறார். அங்கு திருக்கைத்தல சேவை (நம்​மாழ்​வார் பராங்குச நாயகியான திருக்​கோலத்​தில்) நடைபெறுகிறது. அதன்​பின், உபயதாரர் மரியாதை​யுடன் பொது ஜனசேவை நடைபெறும். இரவு 11.30 மணிக்கு திரு​மாமணி மண்டபத்​தில் இருந்து புறப்​பட்டு வீணை வாத் தி​யத்​துடன் நம்பெரு​மாள் மூலஸ்​தானம் சென்றடைகிறார். ராப்​பத்து உற்சவத்​தின் 8ம் நாளான நாளை(6ம் தேதி) திரு​மங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி, மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்​தில் இருந்து நம்பெரு​மாள் தங்க குதிரை வாகனத்​தில் புறப்​பட்டு வையாளி வகையறா கண்டருளுகிறார். இரவு 7.30 மணிக்கு திரு​மாமணி மண்டபம் சென்​றடைகிறார். அங்கு உபயதாரர் மரியாதை​யுடன் பொதுஜன​சேவை நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு திரு​மாமணி மண்டபத்​தில் இருந்து புறப்​பட்டு வீணை வாத்​தி​யத்​துடன் நம்பெரு மாள் நள்ளிரவு 12.15 மணிக்கு மூலஸ்​தானம் சென்​றடைகிறார். நாளை சொர்க்கவாசல் திறக்கப்படாது. விழா​வின் 10ம் திருநாளான 8ம் தேதி தீர்த்​தவாரி நடைபெறும். 9ம் தேதி நம்மாழ்​வார் மோட்​சம், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்​சி​யுடன் வை​குண்ட ஏ​காதசி ​விழா நிறைவடைகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்