Rock Fort Times
Online News

காமராஜரின் பேத்தி உட்பட 50க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர்…!

தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கி இருக்கிறது. புதிய வரவான தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கிறது. அவருக்கு இளம் வாக்காளர்களின் சப்போர்ட் அதிக அளவில் இருக்கிறது. மாற்று அரசாங்கத்தை விரும்புபவர்களும் அவருக்கு வாக்களிக்க தயாராக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அவரது கட்சியில் பலர் இணைந்து வருகின்றனர். ஏற்கனவே அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மதிமுகவிலிருந்து விலகிய நாஞ்சில் சம்பத் மற்றும் சிலர் இணைந்துள்ளனர். அந்தவகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முன்னிலையில் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான காமராஜரின் பேத்தி மயூரி, முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் மூன்றாவது மகள் கேத்ரின், எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தியின் மகன் ராஜ்மோகன் (ஓபிஎஸ் ஆதரவாளர்)  உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் இன்று (ஜன.5) தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அவர்களுக்கு விரைவில் கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்