இடைநிலை ஆசிரியர்கள் பிரச்சனை தொடர்பாக இன்று( ஜன.3) நல்ல முடிவு எட்டப்படும்- அமைச்சர் அன்பில் மகேஷ்….!
‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது 1 வாரமாக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 1560 பேர் கைது செய்யப்பட்டு அவர்களின் மீது அனுமதியின்றி கூடுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், இடைநிலை ஆசிரியர்கள் விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று (03-01-2026) முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேச இருக்கிறார். அதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 7 நாட்களாக நாங்களும், அதிகாரிகளும் பேசி வருகிறோம். இன்றைக்கு பழைய ஓய்வூதியம் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்த 11 மணிக்கு முதல்வர் எங்களை அழைத்திருக்கிறார். அந்த கூட்டம் முடிந்தவுடன், இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாகவும் பேசப்போகிறேன். இந்த கூட்டம் முடிந்த பின்பு தமிழக முதல்வர் என்ன அறிவுறுத்துகிறாரோ அதன் தொடர்ச்சியாக நிதியமைச்சரின் பேசி நல்ல முடிவை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.