திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கலிங்கபட்டியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (70). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது குடும்பத்தினர் ஒரு வீட்டை பூட்டி விட்டு மற்றொரு வீட்டில் தூங்கினர். இந்நிலையில் இன்று (டிச.20) காலை எழுந்து பார்த்தபோது பூட்டியிருந்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 1 ½ சவரன் நகை கொள்ளை போயிருப்பது தெரியவந்தது. மேலும், நள்ளிரவில் அருகில் உள்ள இரண்டு வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்திருந்தது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் மணப்பாறை போலீசார் வடக்கு பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.