சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து- ஊழியர்கள் உடனே வெளியேற்றப்பட்டதால் உயிர் சேதம் தவிர்ப்பு…!
சென்னை அண்ணா சாலையில் உள்ள தென் மண்டல பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இன்று(டிச. 20) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 8 மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் கீழிருந்து, மேலாக ஒவ்வொரு மாடிக்கும் தீ பரவியது. காலை நேரம் என்பதால் அலுவலத்தினுள் ஒரு சில ஊழியர்கள் மட்டுமே இருந்த நிலையில் அவர்கள் உடனே பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.