வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து உங்கள் பெயர் நீக்கப்பட்டு விட்டதா? பதறாதீங்க…. இன்னொரு ‘சான்ஸ்’ இருக்கு…!
தமிழகத்தில் இன்னும் 6 மாத காலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.அதற்கான பணிகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று( டிச.19) வெளியிடப்பட்டது. இதில், 97 லட்சத்து 37 ஆயிரம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ளதா? அல்லது நீக்கப்பட்டு விட்டதா? என்பதை அறிய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.
1. voters.eci.gov.in அல்லது electoralsearch.eci.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
2.உங்கள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC) எண்ணை உள்ளிடவும். உங்கள் பெயர், வயது மற்றும் தொகுதி போன்ற தனிப்பட்ட விவரங்களையும் உள்ளிட வேண்டும்.
3. பின்னர் ‘தேடல்’ பொத்தானை அழுத்தி உங்கள் வாக்காளர் விவரங்களைக் காணலாம்.
4. இதன்மூலம் வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருப்பதை நீங்கள் உறுதிசெய்து
கொள்ள முடியும்.
பெயர் இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும்.?
இந்த பட்டியலில் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் ஜனவரி 18-ம் தேதி வரை தெரிவிக்கலாம். இடம் மாறியவர்கள் படிவம் 8, புதிதாக சேர்பவர்கள் படிவம் 6 ஆகியவற்றை பூர்த்தி செய்து ஆவணங்களுடன் வழங்கி, வாக்காளர் பட்டியலில் ஜனவரி 18ம் தேதிக்குள் இணைத்துக் கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்ளவும் மேலும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.