தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்) நவம்பர் மாதம் 4ம் தேதி முதல் நடைபெற்றது. இந்தப் பணிகள் முழுமையாக முடிவடைந்து இன்று (டிச.19) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் விவரம் மாவட்டம் வாரியாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் 3.31 லட்சம் வாக்காளர்களும், சேலம் மாவட்டத்தில் 3.62 லட்சம் வாக்காளர்களும் நீக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் மொத்தம் இருந்த 23.68 லட்சம் வாக்காளர்களில் 3.31 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். மொத்தம் உள்ள 35 மாவட்டங்களில் 97 லட்சத்து 37 ஆயிரம் பேர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 6.41 கோடி வாக்காளர்களில் 97,34,832 பெயர்கள் நீக்கப்பட்டு, 5.43 கோடி பேர் கொண்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Comments are closed.