திருச்சி, ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள கல்லுக்குழியில் புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு நடைபெறும் விழாக்களுள் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்நிலையில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இன்று (டிச.19) சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மார்கழி மாத மூல நட்சத்திரத்தில் நடைபெறும் இந்த முக்கிய விழாவையொட்டி அதிகாலை 5 மணி முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. முக்கிய நிகழ்வாக கருவறை ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து எட்டு வடைகள் அடங்கிய வடமாலை சாற்றப்பட்டதுடன், உற்சவர் ஆஞ்சநேயருக்கும் ஒரு லட்சத்து எட்டு வடைகள் மற்றும் ஜாங்கிரி மாலைகளால் சிறப்பான அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இந்த சிறப்பு வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். விழாவின் தொடர்ச்சியாக இன்று இரவு 9 மணிக்கு சுவாமி திருவீதி உலா வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சரண்யா மற்றும் தக்கார் வினோத்குமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

Comments are closed.