தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் நவம்பர் நான்காம் தேதி முதல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கியது. அந்தப் பணிகள் தற்போது முழுமையாக முடிவடைந்த நிலையில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று(19-12-2025) வெளியிடப்பட்டது. திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 3,31,787 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவுகள், நீண்ட காலமாக வாக்களிக்காதவர்கள் மற்றும் தவறான முகவரி விவரங்கள் கொண்ட பதிவுகள் ஆகியவை கள ஆய்வு மற்றும் ஆவணச் சரிபார்ப்பின் மூலம் கண்டறியப்பட்டன. அவற்றின் அடிப்படையில் விதிமுறைகளுக் கேற்ப இந்த பெயர் நீக்கம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தகுதியான யாருடைய பெயரும் தவறுதலாக நீக்கப்படவில்லை என்பதை உறுதி செய்ய அனைத்து நிலைகளிலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், எவருக்கும் குறை இருந்தால் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து மீண்டும் பெயர் சேர்க்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.