Rock Fort Times
Online News

திருச்சியில் ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் மற்றும் குழந்தைகள் தின விழா…* வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் கொண்டாட்டம்!

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் குழந்தைகள் தின விழா திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம் நாச்சிகுறிச்சி பஞ்சாயத்தில் உள்ள கே. சோழங்கநல்லூர் கிராமத்தில் இன்று(14-11-2025) உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளர் கம்பரசம்பேட்டை பி.தர்மராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நேரு திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின்னர் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு உரைகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், கிராமத்தினைச் சேர்ந்த குழந்தைகளும், பெரியவர்களும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்