திருச்சி மாநகராட்சி 13-வது வார்டில் பொதுமக்கள் வைத்த கோரிக்கை : உடனடியாக நிறைவேற்றிய திமுக கவுன்சிலர் மணிமேகலை ராஜபாண்டிக்கு பாராட்டுகள் குவிகிறது!
திருச்சி மாநகராட்சி, 13வது வார்டுக்குட்பட்ட புதுப்பட்டி சந்து மற்றும் மலைக்கோட்டை ஆகிய பகுதிகளை இணைக்கும் வழியில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த படிக்கட்டுகள் செங்குத்தாக இருப்பதாலும், பக்கவாட்டில் கைப்பிடிகள் ஏதும் இல்லாததாலும் இவ்வழியாக செல்லும் முதியவர்கள், பெண்கள் ஆகியோர் படியேற முடியாமல் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர். எனவே, இப்பகுதி மக்கள் 13வது வார்டு திமுக கவுன்சிலரான மணிமேகலை ராஜபாண்டியிடம் படிக்கட்டுகளுக்கான கைப்பிடிகளை அமைத்துத்தர கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் மலைக்கோட்டை மற்றும் புதுப்பட்டி சந்து ஆகிய பகுதிகளை இணைக்கும் செங்குத்தான படிக்கட்டுகளுக்கு இருபுறமும் தற்போது புதிதாக கைப்பிடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

தங்களது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி கொடுத்த கவுன்சிலர் மணிமேகலை ராஜபாண்டியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். திருச்சி மாநகராட்சி 13 வது வார்டு திமுக கவுன்சிலராக இருக்கும் மணிமேகலை ராஜபாண்டி, தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் கழிவு நீர் கால்வாய்களை கட்டமைப்பது, தெரு விளக்குகள் அமைத்துக் கொடுப்பது, குடிநீரை தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்வது போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து உடனுக்குடன் நிறைவேற்றி தருகிறார். மேலும் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.19.5 லட்சம் மதிப்பில் தாயுமானவர் தெருவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மையத்திற்கான புதிய கட்டிடம் அமைக்க வழிவகை செய்தது, ரூ.25 லட்சம் மதிப்பில் நிறுவப்பட்ட பன்னோக்கு பயன்பாட்டு மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது, போன்ற இவரது ஆக்டிவான களப்பணி 13வது வார்டு மக்களிடத்தில் பாராட்டுகளை பெற்றுள்ளது.

Comments are closed.