திருச்சியில் உள்ள தேவர் சிலைக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை…!
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், மாநகராட்சி முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில ஜெ.பேரவை துணை செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான சி.அரவிந்தன், மாவட்ட இணைச் செயலாளர் ஜாக்குலின், மாவட்ட கழக செயலாளர்கள் வழக்கறிஞர் ஆர்.வனிதா, பத்மநாதன், மாவட்ட பொருளாளர் ஜி.ராஜசேகர், வி.பத்மநாதன், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் வெங்கட்பிரபு, இளைஞர் பாசறை லோகநாதன், சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் தென்னூர் கே.அப்பாஸ், கலைப்பிரிவு மாவட்ட செயலாளர் ஜான் எட்வர்ட்குமார், பகுதி கழக செயலாளர்கள் ஏர்போர்ட் விஜி, மலைக்கோட்டை அன்பழகன், ரோஜர், பேரவை இணை செயலாளர் வழக்கறிஞர் தினேஷ் பாபு, பொன்னார், பேரவை துணைச் செயலாளர் கருமண்டபம் பி.சுரேந்தர், சிறுபான்மை பிரிவு தென்னூர் ஷாஜகான், மகளிர் அணி துணைத்தலைவி வழக்கறிஞர் புவனேஸ்வரி, மாணவர் அணிதுணைத் தலைவர் வழக்கறிஞர் சேது மாதவன்,எம்ஜிஆர் மன்றம் வாழைக்காய் மண்டி சுரேஷ், அப்பா குட்டி (எ) அப்துல் ரகுமான், மகளிர் அணி இணைச் செயலாளர் ஜெயஸ்ரீ, சிந்தாமணி எல்.முத்துக்குமார், மலைக்கோட்டை மு.கதிரவன், புத்தூர் எஸ்.ரமேஷ், வசந்தம் டி.செல்வமணி, இலியாஸ், ஷெரீப், ரெயின்போ வி.சேகர், தில்லை டி.விஸ்வா, மரியம் அப்துல்ரஜாக், உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.