பிரபலமான அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் கணேசன் இல்ல திருமண வரவேற்பு விழா…* பெரம்பலூரில் நாளை (அக்.26) பிரம்மாண்டமாக நடக்கிறது!
பெரம்பலூரை தலைமை இடமாகக் கொண்டு தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் பிரபலமான அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் நிறுவனர் கே.ஆர்.வி கணேசன் – செல்வகுமாரி தம்பதியரின் இளைய மகன் ஜி.அஸ்வினுக்கும், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை கல்லூரணி கிராமம் பி.விஜயன் – விஜயலட்சுமி தம்பதியரின் மகள் டாக்டர் வி.ஹம்ருத்தாவுக்கும் நாளை மறுதினம் ( அக்.27 ) திங்கட்கிழமை திருமணம் நடைபெற உள்ளது. முன்னதாக பெரம்பலூரிலிருந்து துறையூர் செல்லும் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் நாளை ( அக்.26 ) மாலை 5 மணிக்கு திருமண வரவேற்பு விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பல்வேறு தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், நண்பர்கள், உறவினர்கள், நலன் விரும்பிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த இருக்கின்றனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இருவீட்டாரும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Comments are closed.