மகாத்மா காந்தியின் பேரன் அருண்காந்தி, மஹாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் இன்று (02.05.2023) காலமானார். அவருக்கு வயது 89. மகாத்மா காந்தியின் இரண்டாவது மகன் மணிலால். இவருக்கும் சுசிலா என்பவருக்கும் 1934ம் ஆண்டு ஏப்ரல் 14ல் தென்னாப்ரிக்காவின் டர்பன் நகரில் பிறந்தவர் அருண்காந்தி. தனது வாழ்நாளில், பாட்டனார் மகாத்மா காந்தியின் வழி நின்று, அவரது பாதையில் அரசியல் மற்றும் சமூகப் போராளியாக அடையாளம் காணப்பட்டார். தற்போது மஹாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றியிருந்த அருண்காந்தி, இன்று காலை வயது மூப்பின் காரணமாக காலமானார். அவரதுஇறுதிச் சடங்குகள் இன்று மாலை கோலாப்பூரில் நடைபெற இருப்பதாக, அருண் காந்தியின் மகன் துஷார்காந்தி தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.