கோவை சத்தி மெயின் ரோட்டில் நேற்று ஒருவர் தாறுமாறாக நான்கு சக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளாா். இதனால் சாலையில் சென்றவர்கள் அலறி அடித்து விலகி சென்றனர். அப்போது சில வாகனங்களின் மீது அந்த நான்கு சக்கர வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தியது. அந்த வாகனத்தை நிறுத்த அங்கிருந்த வாகன ஓட்டிகள் முற்பட்டும் நிற்காமல் வேகமாக சென்றது. இந்நிலையில் வாகன ஓட்டிகள் சிலர் அந்த வாகனத்தை விரட்டி மடக்கி நிறுத்துகையில் அந்த வாகனத்தை ஓட்டி வந்தவர் மீண்டும் வாகனத்தை வேகமாக இயக்கி அங்கிருந்து சென்றுள்ளார். இந்நிலையில் அந்த நான்கு சக்கர வாகனம் சிவானந்தபுரம் விவேகானந்தர் நகர் பகுதியில் இருந்த ஒரு மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. அதில் நான்கு சக்கர வாகனம் ஓட்டி வந்தவர் உயிர் தப்பினார். இதனை அடுத்து வாகனத்தை ஓட்டி வந்த வாலிபரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள், சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தொிவித்தனா் . இதனையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் நான்கு சக்கர வாகனம் ஓட்டி வந்தவர் கோவை சரவணம்பட்டி அடுத்த விநாயகபுரம் லட்சுமி நகர் பகுதியில் சேர்ந்த அரவிந்த் என்பதும், சரவணம்பட்டி பகுதியில் உணவுகம் ஒன்றை நடத்தி வருவதும் தெரிய வந்தது. இதனையடுத்து அவாிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.