Rock Fort Times
Online News

கர்நாடகா தேர்தல் களத்தில் பரபரப்பு நடிகர் சிவராஜ்குமார் காங்கிரசுக்கு திடீர் ஆதரவு !

நடைபெறவுள்ள கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கன்னட நடிகர் சிவராஜ்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

” ராகுல் காந்தி ரசிகனாக இங்கு வந்துள்ளேன், அவரின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது ”
என நடிகர் சிவராஜ்குமார் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேச்சு.

 

 

முன்னதாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பிரச்சாரத்தில் கலந்து கொள்வதற்காக ஹெலிகாப்டரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் பயணித்த    ஹெலிகாப்டர் மீது  வானில் பறந்து வந்த கழுகு லேசாக  மோதியது. நிலை தடுமாறிய ஹெலிகாப்டரை விமானி நடுவானில் இருந்து அவசரமாகவும், அதே சமயம் லாபகமாகவும் தரையிறக்கினார். இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பில்லை. இந்நிலையில் கார் மூலம் சிவக்குமார் கோலார் சென்றடைந்தார்.

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்