Rock Fort Times
Online News

விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தற்போதே தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதேபோல முதல் முறையாக சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் தமிழக வெற்றிக்கழகமும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் கட்சியின் தலைவர் விஜய், 2 மாவட்டங்கள் வீதம் பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசி வருகிறார். அந்தவகையில் செப்டம்பர் 27ம் தேதி சனிக்கிழமை நாமக்கல் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு கரூரில் பேசிய போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுவதாக அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தவெக தலைமை நிலையச் செயலகம் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், ”அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.” என கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்