Rock Fort Times
Online News

திமுக பாணியில் கர்நாடகா காங்கிரஸ் வாக்குறுதி : குடும்ப தலைவியா.. இந்தா பிடி இலவசம்!

திமுக பாணியில் குடும்பத் தலைவிகளுக்கு 2000 ரூபாய் இலவசத்தை அறிவித்துள்ளது கர்நாடகா காங்கிரஸ் கட்சி. கர்நாடக சட்டசபைக்கு மே 10-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தலையொட்டி ஜனதாதளம் (எஸ்) கட்சி ஏற்கனவே தேர்தல் அறிக்கை வெளியிட்டுவிட்டது. அக்கட்சி ஆண்டுக்கு 5 சமையல் கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆளும் பா.ஜனதா நேற்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, ஆண்டுக்கு 3 சமையல் கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் வெளியிட்டனர். அறிக்கையில் முக்கிய அறிவிப்பாக அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக பாணியை பின்பற்றுகிறதோ கர்நாடக காங்கிரஸ்?

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்