Rock Fort Times
Online News

எண்ணூர் அனல்மின் நிலையத்தில் சாரம் சரிந்து 9 பேர் பலி..!

சென்னை எண்ணூரில் உள்ள அனல்மின் நிலையத்தின் 4வது அலகில் இன்று(30.09) கட்டுமானப் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது சாரம் சரிந்து விழுந்தது. இதில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலர் சிக்கி கடுமையாக காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவர்கள் மேற்கொண்ட தீவிர சிகிச்சையிலும் 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு நிவாரணம் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்