கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு: கரூர் வந்த மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல். முருகனிடம் போலீஸ் அதிகாரிகள் விளக்கம்…!
கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக கரூர் வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோரை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வரவேற்றார். பின்னர் அவர்கள் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், சம்பவ இடத்தை பார்வையிட்டனர். சம்பவம் குறித்து மாவட்ட அதிகாரிகளும், காவல்துறையினரும் மத்திய அமைச்சர்களிடம் விளக்கமளித்தனர்.

Comments are closed.