Rock Fort Times
Online News

‘தாத்தா மெஸ் ரெஸ்டாரண்ட்’ திருச்சி சமயபுரம் டோல் பிளாசா அருகே உதயம்!- அமைச்சர் கே.என்.நேரு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!

திருச்சி, பெட்டவாய்த்தலையில் இயங்கிவரும் தாத்தா மெஸ்ஸின் புதிய கிளை திருச்சி, சமயபுரம் டோல்பிளாசா அருகே இன்று( செப்.29) துவங்கப்பட்டது. தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய உணவகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவிற்கு வந்திருந்தவர்களை இதன் நிர்வாக பங்குதாரர்களான டாக்டர்கள் ரமேஷ் ஜெயராம், ரம்யா மற்றும் திருச்சி மத்திய மாவட்ட திமுக ஐ.டி. விங் பொறுப்பாளர் ஏ.கே.அருண் ஆகியோர் வரவேற்றனர். இந்நிகழ்வில், திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மண்ணச்சநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கதிரவன், திருச்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மத்திய மாவட்ட திமுக பொருளாளர் துரைராஜ், மண்ணச்சநல்லூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கே.பி.ஏ.செந்தில், மண்ணச்சநல்லூர் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ஸ்ரீனிவாசபெருமாள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை தாத்தா மெஸ் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்