நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார். இவருக்கும் ஆகாஷ் என்பவருக்கும் கடந்த 2000 ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜோவிகா விஜயகுமார் என்ற மகளும் விஜய் ஸ்ரீ ஹரி என்ற மகனும் உள்ளனர் . 2007 ஆம் ஆண்டு ஆகாஷை விவாகரத்து செய்த வனிதா 2007 ஆம் ஆண்டே ராஜன் ஆனந்த் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவருடனான வாழ்க்கை 2012 ஆம் ஆண்டு வரை நீடித்தது.
கடந்த 2020ம் ஆண்டு நடிகை வனிதா விஜயகுமார் திருமணம் செய்ததாக கூறப்படும் பீட்டர் பால் திடீரென உடல் நல குறைவால் இன்று மரணம் அடைந்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகை வனிதா ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து விவாகரத்து செய்த நிலையில் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது. விஷுவல் எபெக்ட் இன்ஜினியர் ஆன பீட்டர் பால், வனிதாவின் யூடியூப் சேனலுக்கு உதவி செய்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும் அதனை அடுத்து திருமணம் செய்ததாகவும் கூறப்பட்டது.
இந்த விவகாரம் பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு தெரியவந்ததை அடுத்து, அவர் காவல்துறையில் புகார் அளித்தார். இந்த விவகாரம் குறித்து நடிகை கஸ்தூரி உள்பட ஒரு சில நடிகைகள் காரசாரமாக சமூக வலைதளத்தில் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பீட்டர் பாலை திருமணம் செய்ததை மறுத்த வனிதா அதன் பிறகு அவரை பிரிந்து விட்டதாகவும் கூறியதாக செய்தி வெளியானது.
பீட்டர் பால் குடி பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும், அதனால் அவரது கல்லீரல் மிகவும் பாதிப்படைந்ததாகவும் கூறப்பட்டது.
இதனை அடுத்து சமீபத்தில் அவர் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை ( 29.04.2023 ) சென்னையில் காலமாகி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. குடிப்பழக்கம் காரணமாக பீட்டர் பால் மரணம் அடைந்தார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்.
அவரது உடல் மனைவியிடம் ஒப்படைக்கப்படுமா அல்லது இதர காரியங்களை வனிதாவே முன்னின்று செய்வாரா என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
Comments are closed, but trackbacks and pingbacks are open.