
கோவை கார் வெடிப்பு வழக்கு மற்றும் மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் சோதனை நடத்தினர். கோவை கார் வெடிப்பு விபத்து வழக்கு தொடர்பாக 32 இடங்களிலும், மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக 8 இடங்களிலும் சோதனை நடைபெற்றது. தமிழ்நாட்டில் சென்னை, நெல்லை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்திலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.


கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக 14 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் 2 வழக்குகளிலும் ஏராளமான டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் 4 இலட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து 2 வழக்குகளிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.