Rock Fort Times
Online News

திருச்சி சரக டிஐஜி வருண்குமார் உட்பட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்…!

4 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், திருச்சி சரக டிஐஜி வருண்குமார் சென்னை சிபிசிஐடி டிஐஜியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் தமிழ்நாடு மின் உற்பத்திக் கழக டிஜிபியாக இருந்த பிரமோத் குமார் ஊர்க்காவல் படை டிஜிபியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஊர்க்காவல் படை ஐ.ஜியாக இருந்த ஜெயஸ்ரீ குற்ற ஆவணக் காப்பக ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். குற்ற ஆவணக் காப்பக ஏடிஜிபி ஆயுஷ் மணி திவாரி மின் உற்பத்தி கழக ஏடிஜிபியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்