Rock Fort Times
Online News

திருச்சி, திருவெறும்பூர் அருகே ஐடி ஊழியர் எடுத்த துயர முடிவு…!

திருச்சி, திருவெறும்பூர் நவல்பட்டு பகுதியில் உள்ள ஐடி பார்க்கில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை தாலுகா, கைகோல்பாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த வெள்ளயங்கிரி என்பவரது மகன் பொன்கார்த்திக் (வயது 24) என்பவர் பணிபுரிந்தார். இவர், அண்ணா நகர் பகுதியில் சக ஊழியர்களுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் மாடியில் உள்ள அறையில் பொன்கார்த்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் பொன் கார்த்திக் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இருந்தாலும் இது தொடர்பாக அவருடன் தங்கி இருந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்