Rock Fort Times
Online News

திருச்சியில் “கிங்டம்” திரைப்படம் ஓடிய தியேட்டரை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்…!

“கிங்டம்” என்ற திரைப்படம் தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் திருச்சியில் உள்ள சினிமா தியேட்டர்களிலும் வெளியானது .இந்த படத்தில் ஈழ தமிழர்களை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் திருச்சியில் கிங்டம் திரைப்படம் வெளியாகிய தியேட்டரை முற்றுகையிட்டு படத்தை ஓட்டக்கூடாது என வலியுறுத்தினர். இதுதொடர்பாக திரையரங்கு மேலாளரிடம் மனுவும் அளித்தனர். தொடர்ந்து திரைப்படம் திரையிடப்பட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என அவர்கள் தெரிவித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்