12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே ஐந்தாம் தேதி வெளியிடுவதாக இருந்தது. இந்த நிலையில் முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். மே 7-ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளதால் முதல்-அமைச்சரிடம் ஆலோசித்து புதிய தேதி அறிவிக்கப்படும் என்றும் திட்டமிட்டபடி மே 5-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானால் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படலாம் என்பதை கருத்தில் கொண்டு தேதி மாற்றப்படுவதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.