ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் நடத்தப்படும் அர்ச்சகர் படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு..!
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவிலில் நடத்தப்படும் வைணவம் (பாஞ்சராத்ர ஆகமம்) ஓராண்டு இளநிலை வைணவ அர்ச்சகர் சான்றிதழ் படிப்புக்கு இந்த ஆண்டு 2025-26 மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் சேர விரும்பும் மாணவர்கள் உரிய படிவத்தில் தங்களது விவரங்களை முழுமையாக அளித்து உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது. இதில் சேர 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்து மதத்தில் வைணவ சம்ப்ரதாயத்தை பின்பற்றும் நபர்களாக இருக்க வேண்டும். 01.07.2025 அன்று 14 வயது பூர்த்தியடைந்தவராகவும், 24 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் ஊக்கத்தொகையாக மாதந்தோறும் ரூ. 10 ஆயிரம் வழங்கப்படும். பயிற்சி காலம் ஓராண்டாகும். இதற்கான விண்ணப்பித்தினை https://srirangamranganathar.hrce.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து
பூர்த்தி செய்து வருகிற 14.07.2025 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு தங்குமிடம், உணவு, உடை, பாடபுத்தகங்கள், நோட்டுகள். மற்றும் மருத்துவ வசதி அனைத்தும் திருக்கோயில் மூலம் வழங்கப்படும். விண்ணப்பங்களை இணை ஆணையர், செயல் அலுவலர்
அரங்கநாதசுவாமி திருக்கோயில் ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி 620 006 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும், விவரங்கள் தேவைப்பட்டால் 94433 98769, 84288 25526, 95784 91124 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.