Rock Fort Times
Online News

தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு- * ஜூலை 2-ம் தேதி முதல் தொடங்குகிறது…!

தமிழக தொடக்கக் கல்வித்துறையில் பணியிட மாறுதலுக்காக சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (கவுன்சிலிங்) ஜூலை 2 முதல் 30ம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தொடக்கக் கல்வித் துறை அறிவித்துள்ளது. அதேபோல, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,436 இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 14 முதல் 18ம் தேதி வரை பணி நியமன கலந்தாய்வு நடைபெறும் என தொடக்க கல்வித்துறை இயக்குனர் நரேஷ் தெரிவித்துள்ளார். ஆனால், போக்சோ வழக்கில் பணியிட மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு, மீண்டும் அதே மாவட்டத்தில் பணி வழங்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். உள்மாவட்டத்திற்கு மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்கள் தங்களுக்குரிய சுழற்சி வரும்போது, அம்மாவட்டத்தில் தங்களுக்கு மாறுதல் பெற்றுக்கொள்ள விருப்பமுள்ள காலிப்பணியிடம் ஏதும் இல்லையெனில், Not Willing என தேர்வு செய்து கொள்ளலாம். பின்னர், உள் மாவட்டத்திற்கான கலந்தாய்வு முழுமையாக முடிவு பெற்ற பிறகு, Not Willing என தேர்வு செய்தவர்களுக்கு மீண்டும் உள்மாவட்டத்திற்குள் மாறுதல் பெற வாய்ப்பு அளிக்கப்படும். நேரடி நியமனம், பணி நிரவல் மற்றும் பொது மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணை மற்றும் மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் முன்னுரிமைப் பட்டியல் நாளை (ஜூன் 28) காலை 10 மணிக்கு வெளியிடப்படும். மாறுதல் கோரும் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமைப் பட்டியல் ஜூன் 30ம் தேதி வெளியிடப்படும்.

மலைப்பகுதி பள்ளிகள்:

மலைப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான)l மாறுதல் கலந்தாய்வு (21 ஒன்றியங்களுக்கு மட்டும்) 2.7.2025 புதன்கிழமை நடைபெறும்.
இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) பணிநிரவல் 3.7.2025 முற்பகல் நடைபெறும்.
இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு (கல்வி மாவட்டத்திற்குள்) 3.7.2025 பிற்பகல் நடைபெறும்.
இடைநிலை ஆசிரியர்கள் பணிநிரவல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) 4.7.2025 வெள்ளிக் கிழமை நடைபெறும்.
இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) 5.7.2025 சனிக் கிழமை காலை நடைபெறும்.
இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) 5.7.2025 மதியம் சனிக்கிழமை நடைபெறும்.
இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) 7.7.2025 முதல் 11.7.2025 வரை நடைபெறும்.
இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கான நேரடி நியமன கலந்தாய்வு 14.7.2025, 18.7.2025 வரை நடைபெறும்.

தலைமை ஆசிரியர்கள்:

தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) 19.7.2025 சனிக்கிழமை நடைபெறும்.
தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) 19.7.2025 நடைபெறும்.
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) 21.7.2025 திங்கட்கிழமை நடைபெறும்.
பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்திற்குள்) 24.07.2025 வியாழக் கிழமை நடைபெறும்.
பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (வருவாய் மாவட்டத்திற்குள்) 25.07.2025 வெள்ளிக் கிழமை நடைபெறும்.
பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்) 26.7.2025 மற்றும் 28, 29, , 30-ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்